Sub-Inspector வில்சனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்!

Sub-Inspector வில்சனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்!
சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் நிதி வழங்கபடுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை சோதனைச் சாவடியில் வில்சன், இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். சம்பவம் நிகழ்ந்த பகுதியில் கேரள மாநில, தமிழக டிஜிபிக்கள் ஆலோசனை நடத்திய நிலையில், குற்றவாளிகள் பற்றி துப்புக்கொடுத்தால் தமிழக அரசு 2 லட்சம் ரூபாயும், கேரள அரசு 5 லட்சம் ரூபாயும் சன்மானம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக தக்கலையில் தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் காவல்துறை உயரதிகாரிகள் தலைமையில் ஆலோசனை நடத்தினார். அதன் பின் விசாரணையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும், விசாரணை முடிவு விரைவில் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் உயரிய தியாகத்தை கருத்தில் கொண்டு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு வழங்கப்படும் என தெரிவித்தார். வில்சனின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப அரசு பணி வழங்கப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.