அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்த தமிழ் பட நடிகை -யார் இவர் , எந்த படத்தில் நடித்திருக்கிறார் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்த தமிழ் பட நடிகை -யார் இவர் , எந்த படத்தில் நடித்திருக்கிறார் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் திரையுலகில் 2021-ம் ஆண்டில் வெளியான காதம்பரி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் அகிலா நாராயணன். இவர், அமெரிக்காவில் வாழும் தமிழ் வம்சாவளியை சேர்ந்த இவர் கலைத்துறை மீதுள்ள ஆர்வத்தினால் அவரது சொந்த முயற்சியால் சினிமாத்துறையில் அறிமுகமாகியுள்ளார்.

ஆனால் திரை துறையில் சாதிக்க வேண்டும் என இவர் நினைக்காமல் தான் வாழும் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அமெரிக்க இராணுவத்தில் இணைந்துள்ளார். இதற்காக இவர், பல மாதங்களாக அமெரிக்க இஇராணுவப் போர்ப் பயிற்சியை பெற்றுவந்துள்ளார். தற்போது வெற்றிகரமாக அமெரிக்க இராணுவ வீரர்களின் சட்ட ஆலோசகராக இணைந்துள்ளார்.

மேலும் தனது குடும்பத்தினரின் ஆதரவோடு அமெரிக்க இராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ள அகிலா நாராயணன் அமெரிக்க இஇராணுவத்திற்கு சேவை செய்வதை தனது கடமையாக கருதுகிறார்.

இதுமட்டுமின்றி, நைடிங்கேல் ஸ்கூல் ஆஃப் மியூசிக் என்ற ஆன்லைன் இசை பள்ளியை நடத்தி வருகிறார். இந்த இசைக் கலையை ஆன்லைன் மூலம் கற்றுக்கொடுக்கிறார்.

இவரின் இந்த முயற்சிக்கு சோசியல் மீடியாகளில் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க:  பழங்காலங்களில் எப்படில்லாம் த.ண்ட.னை கொடுத்திருக்கானுங்க பாருங்க!! பார்த்தாலே கு.லை நடுங்.குகி.றது !! இப்போது சிறையில் அடைப்பது மட்டுமே த.ண்ட.னை!