கருவை கலைச்சுடுங்க… அறிவுறுத்திய மருத்துவர்கள்.. 10முறை சொல்லியும் பெற்றெடுத்த அம்மாவின் பாசப்போராட்டம்..!

கருவை கலைச்சுடுங்க… அறிவுறுத்திய மருத்துவர்கள்.. 10முறை சொல்லியும் பெற்றெடுத்த அம்மாவின் பாசப்போராட்டம்..!

உங்க குழந்தை ஆரோக்கியமா இல்ல. கலைச்சுடுங்க. இப்படியே பிறந்தா மாற்றுத்திறனாளியாத்தான் பிறக்கும். அதோட அன்றாட வாழ்க்கைக்கே அது ரொம்ப கஷ்டம் ஆகிடும். என மருத்துவரே சொன்ன நிலையிலும், அதையெல்லாம் பொருட்படுத்தாத பாசத்அம்மா அழகான பெண் பிள்ளைக்கு அம்மா ஆகி இருக்கிறார்.

பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர் நடாலி ஹால்சன். 29 வயதான இவர் கருவுற்றார். இதை தன் கணவரிடமும், உறவுகளிடமும் சொல்லி மிகவும் சந்தோசப்பட்டார். கணவரும் ஆப்பிள், ஆரஞ்சு என தினம் ஒரு பழம் வாங்கிவந்து கண்ணும், கருத்துமாக பார்த்து வந்தார். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. 22ம் வாரத்தில் பிள்ளையை ஸ்கேன் செய்து பார்த்தனர்.

அப்போது தான் கருவில் இருக்கும் பிள்ளைக்கு spina bifida என்ற நோய் தாக்கி இருப்பது தெரிய வந்தது. முதுகெழும்பு, தண்டுவடம் சரியாக வளர்ச்சியடையாமல் இருப்பதே இந்நோய். இப்படியே விட்டால் டெலிவரி ஆன பிள்ளை தன் அன்றாட வாழ்வை மேற்கொள்ளவே ரொம்ப கஷ்டப்படும். எனவே கருவை கலைத்து விட அறிவுரை சொல்லியிருக்கிறார் செக்கப் செய்த டாக்டர். அதுவும் ஒருமுறை..இருமுறையல்ல…பத்துமுறை இப்படியான அறிவுரையை சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் அந்த பாசத்அம்மா அதையெல்லாம் தன் செவி-களுக்கு மட்டுமே ஏற்றினாலே தவிர, மனதுக்குள் கொண்டு செல்லவே இல்லை. பத்தாவது மாதத்தில் பெண் பிள்ளையும் பிறந்தது. மூன்றரை கிலோ எடை இருந்த அந்த பிள்ளை மருத்துவர்கள் சொன்னது போல், அந்த பிள்ளையின் முதுகெழும்பு, தண்டுவடத்தில் பிரச்னை இருந்தது. 12 மணிநேரம் பிறந்த பிள்ளைக்கு அறுவை சிகிட்சை நடந்தது.

இதையும் பாருங்க:  பழங்காலங்களில் எப்படில்லாம் த.ண்ட.னை கொடுத்திருக்கானுங்க பாருங்க!! பார்த்தாலே கு.லை நடுங்.குகி.றது !! இப்போது சிறையில் அடைப்பது மட்டுமே த.ண்ட.னை!

அம்மா நடாலியாவின் கண்களில் இருந்து தாரை, தாரையாக கண்ணீர் வந்து கொண்டிருந்தது. அவரது கைகள் பிரார்த்திக்க கூப்பிய வண்ணமே இருந்தது. இப்போது அறுவை சிகிட்சைக்கு பின்னர் அந்த பிள்ளை 90 சதவிகிதம் தேறிவிட்டது. இதை தன் முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியோடு போட்டிருக்கிறார் அந்த பாசத்அம்மா நடாலியா.

மருத்துவர்களே கைவிட்ட நிலையிலும், மனம் தளராத தன் பாசத்தால் ஒரு பிள்ளையை ஜனனித்து இருக்கிறார் இந்த பாசத்அம்மா!