வாகனங்களில் செல்லும் போது வளைவில் கவனம் தேவை

வாகனங்களில் செல்லும் போது வளைவில் கவனம் தேவை என்பதை விளக்கும் காணொளி ஒன்று இணையத்தில் தற்போது வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

பொதுவாக சாலைகளில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் வீட்டில் சொல்வார்கள் ஏனென்றால் நாம் சரியான பாதையில் சென்றாலும் எதிர்ப்பவர்கள் மற்றும் பின்னால் வருபவர்கள் நமக்கு ஏதாவது நடக்கக்கூடும் என்றுதான் அவ்வாறு சொல்வார்கள். அப்படி பல சம்பவங்கள் நடப்பதை நாம் வாகனங்களில் செல்லும்போது நேரில் பார்த்திருக்கக்கூடும் நமக்கே கூட நடந்திருக்கக் கூடும். அதுபோல்தான் கேரளாவில் நடந்த ஒரு நிகழ்வு வீடியோவாக இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

அந்த நிகழ்வின் போது ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சரியான வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார். அங்கே இருக்கும் வளைவில் அவர் செல்லும் போது எதிர் திசையில் இருந்து வந்த இரு சக்கர வாகனம் நடுக்கோட்டை தாண்டி இவர் செல்லும் பாதையில் வருகிறது கட்டுப்பாட்டை இழந்த இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சியை அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இருவருக்கும் பெரிய ஆபத்து ஏதும் இல்லை என்றாலும் இது போன்ற சம்பவங்களை தவிர்க்க நாம் மிகவும் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவின் கீழ் பகிர்ந்து வருகின்றனர். உங்களுக்காக அந்த நிகழ்வின் வீடியோ இங்கே