வடசென்னையில் பெரிதும் பேசப்பட்ட ராஜனின் கதை

வடசென்னையில் பெரிதும் பேசப்பட்ட ராஜனின் கதை

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் பெரிதும் பேசப்பட்ட ராஜன் கதாபாத்திரத்தின் வீடியோ வெளியாகியுள்ளது . அந்த வீடியோ ரசிங்கர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது .

வட சென்னை (Vada Chennai) வெளிவந்துள்ள தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இது வடசென்னை பகுதியில் உள்ள மக்களின் 35 ஆண்டுகால வாழ்க்கையைப் பற்றிய கதையாகும். இதில் தனுஷ் கேரம் வீரராக முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பகம், தனுஷின் உண்டர்பார் நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் பேக்டரி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இதில் சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் 2011 ஆம் ஆண்டில் வெளியானது. மார்ச் 2012 இல் படப்பிடிப்பு துவங்கியது.

இதையும் பாருங்க:  ஆளில்லாத மலைப்பகுதியில் பெண்ணுக்கு நடந்த உண்மைநிகழ்வு