VJ சித்ராவின் கடைசி காமெடி வீடியோ இதுதான்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை வேடத்தில் நடித்து வருபவர்தான் நடிகை சித்ரா. 28 வயதான இவர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை நடிகையாக வளர்ச்சி அடைந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா தொடரின் படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம் சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நடிப்பதற்காக சென்னை நசரேத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த நடிகை சித்ரா நேற்று இரவு 2.30 மணிக்கு ஓட்டல் அறைக்கு வந்துள்ளார். அதன்பின் குளிக்க போகிறேன் என்று தன் வருங்கால கணவரிடம் சொல்லிவிட்டு சென்றவர், தான் அணிந்திருந்த புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை உருவாகியுள்ளது . இந்நிலையில் அவர் கடைசியாக kpy அணியுடன் சேந்து செய்த காமெடி வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது . அந்த வீடியோ உங்களுக்காக இங்கே