Windows 7 Os-ஐ முடிவுக்கு கொண்டுவந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்

MicroSoft நிறுவனத்தின் Windows 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Operating System) மென்பொருள் வருகின்ற 14ம் தேதி யுடன் முடிவுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கணிணி மற்றும் மடிக்கணிணி பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் Windows 7 யையே பயன்படுத்துகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு விண்டோஸ்10 என்ற மென்பொருள் MicroSoft நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லை என்ற காரணத்தால் இன்று வரை பல பயனீட்டாளர்கள் Windows 7 மென்பொருளையே அதிகம் பயன்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் விண்டோஸ் 10 மென்பொருளை மேம்படுத்துவதற்காகவும், அதன் பயனீட்டாளர்களை அதிகப்படுத்துவதற்காகவும் Windows 7 மென்பொருளின் பயன்பாட்டை முழுமையாக நிறுத்துவதாக MicroSoft நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் Windows 7 மென்பொருளில் இனிமேல் எந்த ஒரு மேம்படுத்துதலும் செய்யப்படாது எனவும், அதை பயன்படுத்தும்போது மென்பொருளில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது சரி செய்யப்படாது எனவும் மைக்ரோசாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் Windows 7 -ன் ஒரிஜினல் மென்பொருளை பயன்படுத்துபவர்கள் இலவசமாகவே விண்டோஸ்10 மென்பொருளை அதன் இணைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் MicroSoft தெரிவித்துள்ளது.