தோனியின் மேனேஜரே இப்படி சொல்லிவிட்டாரே!

தோனியின் மேனேஜரே இப்படி சொல்லிவிட்டாரே!

WORLD CUP 2019 | தோனியின் மேனேஜரே இப்படி சொல்லிவிட்டாரே!-

தோனியின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து அவரின் மேனேஜர் தெரிவித்த கருத்துக்கள் பெரிய வைரலாகி உள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் அதிகமாக தலைப்புச்செய்தியில் இருந்த வீரர் என்றால் அது கண்டிப்பாக தோனியாகத்தான் இருப்பார்.

தொடர் முழுக்க பல்வேறு விஷயங்களுக்காக அவர் வைரலானார். தற்போது தொடர் முடிந்த பின்பும் கூட அவரின் ஓய்வு குறித்த செய்திகள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. என்ன ஓய்வு தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பதுதான் தற்போது கிரிக்கெட் உலகில் பெரிய கேள்வியாக உள்ளது.

தோனி இன்று ஓய்வு பெற போகிறார், நாளை ஓய்வு பெற போகிறார் என்று பல செய்திகள் இணையம் முழுக்க உலவி வருகிறது. ஆனால் இது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் தோனி தரப்பில் இருந்து வெளியாகவில்லை. என்ன சொன்னார் இந்த நிலையில்தான் தற்போது தோனியின் மேனேஜர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், தோனிக்கு இந்திய ராணுவத்தின் மீது தீவிர ஆர்வம் இருக்கிறது. அவர் எப்போது வேண்டுமானாலும் ராணுவத்தில் முழு நேர பணியில் சேர வாய்ப்புள்ளது. இதற்காக அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ராணுவம் எப்படி ராணுவத்தில் முழு நேர பொறுப்பு ஒன்றில் சேர தோனி யோசித்து வருகிறார் என்று அவரின் மேனேஜர் தெரிவித்துள்ளார். தற்போது தோனி இந்திய ராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவில் லெப்டினன்ட் கர்னலாக சிறப்பு பொறுப்பில் இருக்கிறார். அங்கு சிறப்பாக பயிற்சி பெற்ற அவர் பாலிடான் பேட்ச் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர் வாய்ப்புள்ளது இந்த நிலையில் தோனி தனது ஓய்விற்கு பின் அந்த பொறுப்பில் முழு நேரமாக தொடர்வதற்கு கூட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். பாலிடான் பேட்சை தோனி தனது கிளவுஸில் அணிந்து விளையாடியது உலகக் கோப்பை சமயத்தில் பெரிய சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க:  ஓய்வு குறித்து அறிவித்து முற்றுப்புள்ளி வைத்த தோனி!

Related articles