நல்ல விலையில் கிடைக்கும் சிறந்த 5 போன்கள்…

இப்போதைய காலத்தில் ஸ்மார்ட் போன்கள் என்பது அனைவரின் ஆறாவது விரலாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஸ்மார்ட் போன்கள் மீது இருக்கும் மோகம் குறையாமல் அடுத்தடுத்து சிறந்த ஸ்மார்ட் போன்களை வாங்க வேண்டும் என நினைக்கின்றன.
அதற்கு ஏற்றார்போல், ஸ்மார்ட் போன்களில் அதிக சிறப்பம்சங்களையும், வசதிகளையும் உள்ளடக்கி தயார் செய்கின்றன அதனை தயாரிக்கும் நிறுவனங்கள். விலைக்கு ஏற்றார்போல, Touch Screen, அதிக திறன்கொண்ட கேமரா என செல்போன் பிரியர்களுக்கு ஆர்வத்தை ட் தூண்டும் வகையில் செல்போன்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ரூ.15,000க்கு அதிக வசதிகள் கொண்ட மிகச்சிறந்த 5 செல்போன்களின் பட்டியல் இதோ…
Xiomi Redmi Note 8 Pro:
ஆரம்ப விலையாக ரூ.14,999ல் இருந்து விற்பனை செய்யப்படும் Xiomi Redmi Note 8 Pro, 64 மெகா பிக்சல், 8 மெகா பிக்சல், 2 மெகா பிக்சல், 2 மெகா பிக்சல் சென்சார் கொண்ட பின்பக்க கேமரா மற்றும் 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா உள்ளது. மேலும், 8 GB RAM மற்றும் 128 GB Storage உள்ளது. இதனுடைய பேட்டரி, 4500mAh திறன் ஆகும்.
Oppo F11:
தொடக்க விலையாக ரூ.14,990ல் இருந்து விற்பனை செய்யப்படும் Oppo F11, 6GB RAM மற்றும் 128 GB Storage இருக்கிறது. 48 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் என இரு வகையான பின்பக்க கேமரா மற்றும் 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா இருக்கிறது. இந்த செல்போனின் பேட்டரி திறன், 4020mAh ஆகும்.
Galaxy M30s:
குறைந்த விலையில் 6000mAh பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட் போன்களில், Galaxy M30s-ம் ஒன்று ஆகும். இதின் தொடக்க விலை, ரூ.13,999. 4GB RAM மற்றும் 64 GB Storage கொண்ட இந்த செல்போனில், 48 மெகா பிக்சல், 8 மெகா பிக்சல், 5 மெகா பிக்சல் என 3 வகையான பின்பக்க கேமரா மற்றும் 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
Vivo U20:
ரூ.10,999 முதல் கிடைக்கும் Vivo U20, 6.53 இன்ச் Full Display-யுடன் கிடைக்கும். 16 மெகா பிக்சல், 8 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் என மொத்தம் மூன்று பின்பக்க கேமராக்களுடன் வெளியாகியுள்ள இந்த செல்போனின் பேட்டரி, 5000mAh திறன் ஆகும்.
Realme 5:
ரூ.11,999 முதல் கிடைக்கும் Realme 5, 6.5 இன்ச் display உடையது. 12 மெகா பிக்சல், 8 மெகா பிக்சல், 2 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் என மொத்தம் 4 பின்பக்க கேமராக்களை கொண்ட இந்த செல்போன், 13 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவை உடையது. இந்த செல்போனின் பேட்டரி, 5000mAh திறன் ஆகும்.
ஆப்பிள், ஒன் ப்ளஸ் என விலை அதிகமான செல்போன்கள் விற்பனை செய்யப்பட்டுவந்தாலும், விலை குறைவான செல்போன்களை வாங்கவே நடுத்தர மக்கள் ஆர்வம் காட்டி கொண்டே இருக்கின்றன.