முகத்தில் இரண்டு இடங்களில் காயம்!! நடிகை சித்ராவின் மரணத்தில் காவலருக்கு சந்தேகம் – போலீசார் தீவிர விசாரணை

முகத்தில் இரண்டு  இடங்களில் காயம்!! நடிகை சித்ராவின் மரணத்தில் காவலருக்கு சந்தேகம்   – போலீசார் தீவிர விசாரணை

Follow us on Google News Click Here

தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படும் சின்னத்திரை நடிகை சித்ராவின் முகத்தில் 2 இடங்களில் காயம் உள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. 28 வயதான இவர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வந்தது. 


இதில் கலந்துகொள்வதற்காக அதன் அருகில் பழஞ்சூர் பகுதியில் இருக்கும் பிரபல தனியார் ஓட்டலில் சித்ரா தங்கி இருந்தார்.

சித்ராவின் வீடு திருவான்மியூரில் உள்ளது. தினமும் அங்கிருந்து படப்பிடிப்புக்கு சென்று வரமுடியாது என்பதால், படப்பிடிப்பு குழுவினரே இவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதன்படி தினமும் ஓட்டலில் தங்கி இருந்தே படப்பிடிப்பில் சித்ரா பங்கேற்று வந்துள்ளார் .


இந்நிலையில் நடிகை சித்ரா தான் தங்கியிருந்த ஹோட்டலில் இன்று அதிகாலை திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் கல்யாணம் நிச்சயம் ஆனது. கரையான்சாவடி பகுதியை சேர்ந்த ஹேம்நாத் என்பவரோடு வருகிற ஜனவரி மாதம் கல்யாணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சித்ராவுடன் நிச்சயம் செய்யப்பட்ட ஹேம்நாத்தும் ஓட்டலில் தங்கியிருந்துள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் படப்பிடிப்பு முடிந்து ஓட்டலுக்கு திரும்பிய சித்ரா, குளிக்கப் போவதாக கூறியுள்ளார். இதற்காக ஹேம்நாத்தை அறைக்கு வெளியே இருக்குமாறு கூறி உள்ளார். இதையடுத்து ஹேம்நாத் வெளியே சென்றதும் சித்ரா அறையின் கதவை பூட்டிக்கொண்டார்.

குளிக்க பாத்ரூம் சென்ற சித்ரா நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஹேம்நாத் கதவை தட்டினார். நீண்ட நேரமாகியும் சித்ரா கதவை திறக்காததால், இதுபற்றி ஹோட்டல் வரவேற்பறையில் ஹேம்நாத் தகவல் தெரிவித்தார். உடனடியாக ஹோட்டல் ஊழியர் கணேஷ் விரைந்து வந்தார். அவர் மாற்றுச்சாவியால் ரூம் கதவை திறந்தார். அப்போது மின்விசிறியில் நைட்டி அணிந்த நிலையில், சித்ரா தூக்கில் பிணமாக தொங்கினார்.


இதை பார்த்து ஹேம்நாத் கடும் அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர், உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். நசரத்பேட்டை காவல்துறை ஆய்வாளர் விஜயராகவன் உடனடியாக ஹோட்டலுக்கு விரைந்து சென்று உடலை மீட்டார். பின்னர் உடற்கூறு ஆய்வு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சித்ராவின் உடல் ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது.


சித்ரா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று அவரது பிரேதத்தை பார்த்து கண்ணீர் வடித்தனர்.

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நடிகை சித்ராவின் முகத்தில் 2 இடங்களில் காயம் உள்ளது. வலது பக்க கன்னத்திலும், நாடி பகுதியிலும் காயங்கள் உள்ளன. இதுபற்றி போலீசாரிடம் கேட்ட போது, இந்த காயங்கள் எப்படி ஏற்பட்டன என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.


தற் கொலை செய்த போது அறை-யில் சித்ராவின் வருங்கால கணவரான ஹேம்நாத் மட்டுமே உடன் இருந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஹேம் நாத்திடம் கருத்து வேறுபாடு காரணமாக தகராறில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றியும் ஹேம் நாத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


சித்ரா கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்கிற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர் . பிரேத பரி-சோதனையில்தான் சித்ரா மரணம் அடைந்தது எப்படி? என்று தெரியவரும் என்று காவலர் தரப்பில் தெரிவிக்கப்-பட்டது. அதன் பிறகே சித்ரா தற்கொலை வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை-யை எடுக்க முடியும் என்றும் போலீசார் கூறினார்க

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!