முத்தலாக் மனுதாரர் இஸ்ரத் ஜஹானுக்கு கொலை மிரட்டல்! இந்து பண்டிகையில் கலந்துகொண்டதுதான் காரணமா?

முத்தலாக் மனுதாரர் இஸ்ரத் ஜஹானுக்கு கொலை மிரட்டல்! இந்து பண்டிகையில் கலந்துகொண்டதுதான் காரணமா?

Follow us on Google News Click Here

முத்தலாக்கிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்த மேற்குவங்கத்தை சேர்ந்த முஸ்லிம் பெண்மணி இஸ்ரத் ஜஹானுக்கு இந்து பண்டிகையில் கலந்து கொண்டதால் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related image

கொல்கத்தாவின் ஹவுரா நகரைச் சேர்ந்தவர் இஸ்ரத் ஜஹான் (வயது 35), நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய முத்தலாக் விவகாரத்தை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்ற ஐவரில் இவரும் ஒருவர். பின்னர் இவர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

நேற்று மாலை தனது மகனை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தபோது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இஸ்ரத்தை சூழ்ந்து கொண்டு ஆக்ரோஷத்துடன், ஹனுமன் சலிசா என்ற இந்து மத பண்டிகையில் எதற்காக கலந்துகொண்டீர்கள் என்று கேட்டனர். நான் மதச்சார்பற்றவள், நமாஸ் செய்வதற்காக ஹிந்துக்கள் அழைக்கப்படும் போது நான் ஹனுமன் சலிசா நிகழ்ச்சிக்கு செல்வதில் என்ன தவறு என்று பதிலளித்துள்ளார்.

இருப்பினும் ஹிஜாப் அணிந்துகொண்டு இந்து மத நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தவறு என்றும் மதத்திற்கு அவமரியாதை நேர்ந்து விட்டதாக அங்கு திரண்ட கூட்டத்தினர் இஸ்ரத்திற்கு எதிராக கூச்சல் போட்டுள்ளனர்.

Related image

இஸ்ரத்தின் கணவர்வழி உறவினரும், வீட்டின் உரிமையாளரும் கடுமையாக திட்டி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக கோலாபரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முன்னதாக முத்தலாக் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடியபோதும் இதே போன்று தனக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் தற்போது அதனை விட அதிகமாக உள்ளதாகவும் இதனால் தன் வாழ்க்கைக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

14 வயது மகளுக்கும், 8 வயது மகனுக்கும் தாயான இஸ்ரத், கடந்த 2014ல் துபாயிலிருக்கும் கணவர் தொலைபேசியில் அழைத்து முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை நாடியது

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...