இளையராஜா பாடலை அச்சு பிசுங்காமல் அப்படியே இசைத்த சிறுவன் ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் ஆதரவை பெற்று தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

சிறிய இளைஞன் ஒருவன் இளையராஜா பாடலான சங்கீத மேகம் என்ற பாடலுக்கு ட்ரம்ஸ் வாசிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் திறமைசாலியாக வலம் வருகிறார்கள்.
தங்களை ஏதாவது ஒரு துறையில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கேற்றவாறு பெற்றோர்களும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு நடனம், பாடல், விளையாட்டு என அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கின்றதோ, அதில் அவர்களை சிறந்து விளங்க வைக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
சமீபத்தில் இணையத்தில் தொடர்ந்து சிறுவர்கள் சாதனை செய்யும் வீடியோ தான் வலம் வருகின்றது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. அதில் சிறுவன் ஒருவன் 1995 ஆம் ஆண்டு வெளியான உதயகீதம் என்ற திரைப்படத்தில் இருந்து வெளியான சங்கீத மேகம் என்ற பாடலுக்கு ட்ரம்ஸ் வாசிக்கிறார்.
இந்த பாடலை இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்த நிலையில் அவரைப் போலவே அந்த இளைஞன் டிரம்ஸ் வாசிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…
