தனது முதல் தொடரிலேயே இந்தியாவின் வெற்றிக்கு நாயகனாக திகழ்ந்து, கிரிக்கெட் உலகை வியக்க-வைத்துள்ளார் “யார்க்கர் மன்னன் நடராஜன்”
சேலம் மாவட்டத்தில் சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 29 வயதான நடராஜன் தங்கராசு. சின்னப்பம்பட்டி வீதிகளில் டென்னிஸ் பந்துகளில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த நடராஜன், 15 ஆண்டு விடா முயற்சியால் ஆஸ்திரேலியா-விற்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு தேர்வாகி சாதனை பயணத்தை தொடங்கி-யுள்ளார். IPL கிரிக்கெட் தொடரில் யார்க்கர் நாயகனாக ஜொலித்த நடராஜன், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கான நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டார். மற்றொரு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்படவே, நடராஜனுக்கு இந்த வாய்ப்பு கைகூடியது.
தங்கராசு நடராஜன் ”யார்க்கர் நடராஜன்” ஆனது எப்படி ? என்பதை வீடியோ பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்
