venduthal-696x392-1199173
Posted in

நினைத்தது நடக்க விநாயகரை இப்படி வழிபட்டு பாருங்கள்

நினைத்தது நடக்க விநாயகரை இப்படி வழிபட்டு பாருங்கள் என்ற தகவல் இணையத்தில் அதிகப்பேறின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தெய்வங்களிலே நாம் முழு முதல் தெய்வம் என்று வணங்குவது விநாயகர் பெருமான் தான். எந்த ஒரு காரியங்களை தொடங்குவதாக இருந்தாலும், எந்த ஒரு வழிபாட்டை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வணங்கிய பின் தான் அனைத்து காரியங்களும் செய்வோம். காரணம் அவரை வழிபட்ட பின்பு நாம் தொடங்கினால் அந்த காரியம் சிறப்பாக நடக்கும் என்பதே.

அப்படி இருக்க ஒரு காரியம் நடக்க அவரையே வழிபாடு செய்வதென்றால் அந்த காரியம் நிச்சயம் நடந்து தானே ஆக வேண்டும். அதே போல் வழிபாடுகளில் மிகவும் எளிமையாக வழிபாடு செய்யக் கூடிய கடவுளும் இவர் தான். இவருக்கென நாம் பெரிய விரத முறைகளைளோ, பூஜை முறைகளையோ கடைபிடிக்க வேண்டியது கிடையாது.

அப்படி முழு முதற்கடவுளான இந்த எளிமையான தெய்வத்தை எளிமையாக நாம் வீட்டிலே வழங்கினால் நம்முடைய காரியங்கள் நிறைவேறும். அது எப்படி என்ற தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

நினைத்த காரியம் நடக்க விநாயகருக்கு ஏற்ற வேண்டிய தீபம்

இந்த வழிபாட்டை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் தொடங்கியதில் இருந்து ஏழு நாட்கள் தொடர்ந்து செய்ய வைக்கும். ஆகையால் அதற்கு ஏற்றார் போல் நாட்களை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த வழிபாடு துவங்கும் நாள் அன்று காலையில் பிரம்ம முகூர்த்த வேளையிலே எழுந்து குளித்து விடுங்கள். எல்லோர் வீட்டிலும் கட்டாயமாக விநாயகர் படம் இருக்கும். அதை துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விநாயகருக்கு மாலை சூட்டி ஒரே ஒரு டம்ளர் பாலை மட்டும் நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள்.

இந்த வழிபாட்டில் முக்கியமாக செய்ய வேண்டியது நாம் ஏற்றக் கூடிய தீபம். விநாயகருக்கு முன்பாக அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஏற்றுங்கள். நீங்கள் போடக் கூடிய திரியில் ஒரே ஒரு வெட்டி வேரை மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தத் திரியை கொண்டு தான் தீபம் ஏற்ற வேண்டும். அதே போல் கொஞ்சம் அருகம் புல்லை விநாயகருக்கு வைத்து விடுங்கள்.

இந்த வழிபாடு செய்யும் வேளையில் விநாயகர் காயத்ரி மந்திரத்தை சொல்ல வேண்டும். அந்த மந்திரத்தை குறைந்தது 11 முறை சொல்லுங்கள். அதிக பட்சமாக 108 முறை வரை சொல்லலாம் அது உங்களுடைய நேரத்தை பொறுத்தது. ஆனால் நீங்கள் முதல் நாளில் எந்த வேண்டுதலை வைக்கிறீர்களோ அதையே தான் ஏழு நாட்களும் தொடர்ந்து கேட்க வேண்டும். வெவ்வேறு வேண்டுதல்களை மாற்றிக் கேட்கக் கூடாது. ஒரு நாள் ஏற்றிய தீபத்திரியிலே மறுநாளும் ஏற்றலாம்.

இது வரை நடக்காது நீங்கள் என்று நினைத்த காரியங்கள் கூட நிச்சயமாக நடக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கையுடன் இந்த தும்பிக்கை ஆண்டவனை வணங்கி உங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading