Posted in

ராஜா ராணி 2 ( 21/12/21) இன்றைய முழு எபிசோட் அப்டேட்

தமிழ் தொலைக்காட்சியில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான தொடர் ராஜா ராணி 2. பாட்டுக்காக Sravanan கோட்டு சூட் அணிந்து வர அவருடைய அப்பாவும் கோட்டு சூட்டில் தயாராக உள்ளார். அதன் பிறகு அனைவரும் ஒருவரையொருவர் சூப்பர் என புகழ்ந்து கொண்டு பார்ட்டிக்கு கிளம்புகின்றனர்.

பார்ட்டிக்கு வந்ததும் அங்கு இருப்பவர்கள் சரக்கு அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து Sivagami இது சரியான இடமா தெரியல. வாங்க நம்ம ரூமுக்கு போகலாம் என Sivagami கூப்பிடுகிறார். அனைவரும் Sivagamiயை சமாதானம் செய்து ஒரு வழியாக அனுப்பி இருக்க வைக்கின்றனர்.

ஆதி டான்ஸ் ஆட சென்றதைத் தொடர்ந்து Archana செந்திலை அழைத்துக்கொண்டு டான்ஸ் ஆட சென்றுவிடுகிறார். பிறகு சரவணனின் அப்பா Sivagamiயை கூட்டிக்கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்து விடுகிறார்.

Sandhiya அந்த பக்கமாக நகர்ந்து சென்று நிற்க அதற்கிடையில் சரவணனை சக பெண் போட்டியாளர் ஒருவர் மேடைக்கு அழைத்துச் சென்று நடனமாட வைக்கிறார். இதனை பார்த்த Sandhiya கோபித்துக்கொண்டு அப்படியே வெளியே கிளம்பி விடுகிறார். அதன்பிறகு Sravanan வெளியே சென்று ஒரு பிள்ளையை கூப்பிட்டு காதில் Sandhiyaவிடம் சென்று அவருக்கு ஒரு முத்தம் கொடுக்குமாறு சொல்லி அனுப்புகிறார்.

அந்தப் பையனும் சென்று Sandhiyaவை ஆன்ட்டி என சொல்ல ஆன்ட்டினு சொல்லக் கூடாது என சொன்னதும் அக்கா என சொல்லி கையில் இருக்கும் சாக்லேட்டை வாங்கி கொள்கிறார். பிறகு உங்களுக்கு ஒன்னு தருணம் என Sandhiyaவை கீழே குனிய சொல்லி முத்தம் கொடுக்கிறார். இதை அந்த அங்கிள் தான் கொடுக்க சொன்னார் என சரவணனை போட்டுக் கொடுத்து விட்டு ஓடி விடுகிறான்.

பிறகு Sandhiya சரவணனிடம் வந்து அந்தப் பையன் கிட்ட என்ன கொடுக்க சொன்னீங்க என கேட்க எனக்கு ஒன்னும் தெரியாது என Sravanan கூறுகிறார். பிறகு உங்களுக்கு டான்ஸ் ஆட தெரியுமா எனக் கேட்டு Sandhiyaவை மேடைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு இருவரும் டான்ஸ் ஆடுகின்றனர்.

இந்த பக்கம் Sivagami எனக்கு ஜூஸ் மட்டும் போதும் என கூறுகிறார். அவருடைய கணவர் ஜூஸ் என நினைத்து சரக்கை கொண்டு வந்து கொடுக்கிறார். இது தெரியாமல் Sivagami இரண்டு டம்ளர் குடித்து விட்டு இன்னொரு டம்ளர் கிடைக்குமா என கேட்கிறார். இந்த பக்கம் Sandhiyaவும் Sravanan பேசிக்கொண்டிருக்க போட்டி பற்றி பேச அதுபற்றி இப்போது எதுவும் பேசக்கூடாது இது பார்ட்டி செய்கிற நேரம் என டான்ஸ் ஆடுகின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading