jovika-vanitha-9589957
Posted in

வனிதா மகள் ஜோவிகா சொன்ன தகவல்

வனிதா மகள் ஜோவிகா சொன்ன தகவல் ஓன்று வீடியோவாக இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரவாரமாக தொடங்கி இருக்கிறது வழக்கமான பலபரப்பு மற்றும் எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.

முதல் நாளான இன்று நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா சக போட்டியாளர்களுடன் கலந்துரையாடிய ஒரு காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதில் ஜோவிகா பேசுவதை கேட்ட சக பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒரு நிமிடம் திகைத்து தான் போனார்கள்.

அவர் என்ன கூறினார் என்றால்.. எனக்கு சுத்தமாக படிப்பு வரவே இல்லை.. படிப்பின் மீது எனக்கு ஆர்வமே இல்லை.. சில பாடங்கள் எல்லாம் எனக்கு புரியவே இல்லை.. பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களை.. நன்றாக படிக்காத மாணவர்களுடன் ஒப்பிட்டு பேசுவார்கள்.. இது ஒரு மாதிரியான மன உளைச்சலை எனக்கு ஏற்படுத்தியது.

அதனால் நான் படிப்பை தொடருவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன். ஒன்பதாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன். எனக்கு படிப்பின் மீது சுத்தமாக ஆர்வம் இல்லை. நடிக்க வேண்டும் சினிமாவில் வர வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருக்கிறது.

சிறுவயதில் இருந்தே என்னுடைய குடும்பத்தினரின் படங்களை பார்த்தே வளர்ந்தேன். அதனால் படிப்பில் எனக்கு கவனமே இல்லை. நடிப்பில் டிப்ளமோ படித்திருக்கிறேன் என்று கூறினார்.

இதனை கேட்டு சக பிக் பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சியில் திக்குமுக்காடி விட்டார்கள். ஒரு பிரபலத்தின் மகளாக இருக்கிறார்..? படிப்பில் இவ்வளவு வீக்காக இருக்கிறாரே..? என்று பலரும் வியந்து போனார்கள்.

அதையாவது நீங்கள் முடித்து வைத்திருக்க வேண்டும். சினிமாவில் நீங்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லலாம். அதற்கு உங்களுக்கு வயது இருக்கிறது. ஆனால் படிப்பு இந்த வயதில் தான் கிடைக்கும். எனவே இந்த நேரத்தில் நீங்கள் படித்து ஒரு பட்டத்தை பெற்று விட வேண்டும் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து கவர்ச்சி நடிகை விசித்திரா எப்படியாவது நீ 12 ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட வேண்டும். இப்போது நீ படிக்கும் முடிக்கவில்லை என்றால் பின்னாளில் நிச்சயமாக வருத்தப்படுவாய்.

ஏனென்றால் பனிரெண்டாம் வகுப்பு என்பது ஒவ்வொருவருடைய அடிப்படை தகுதி. அதை எப்படியாவது படித்து முடித்துவிட வேண்டும். எப்பாடுபட்டாவது அதனை கஷ்டப்பட்டு முடித்து விட வேண்டும்.

உனக்கு வசதி இருக்கிறது, வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக அதனை தவிர்த்து விட்டால் பின்னாலில் நிச்சயம் வருத்தப்படுவாய். நீயே உன்னை நினைத்து தாழ்வு மனப்பான்மை கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது போன்று பேசினார்.

இதனை பார்த்தது ரசிகர்கள் பலரும் என்ன இந்த பொண்ணு புரியாம பேசிட்டு இருக்கு.. என்று கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading