varahi-amman-star-anand-ram-spiritual-2383754
Posted in

வாராகி அம்மனை இப்படி கும்பிட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்

வாராகி அம்மனை இப்படி கும்பிட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற தகவல் இனியாயத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

வராகி தாயை யார் கும்பிட்டாலும் அவர்களுக்கு உண்டான வரம் சீக்கிரத்தில் கிடைக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ராசி நட்சத்திரக்காரர்கள் இந்த வாராஹி தாயை வழிபாடு செய்யும்போது அவர்களுக்கு உண்டான பலன் இன்னும் அதிவிரைவாக கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. வராகிதாயை யாரெல்லாம் வழிபாடு செய்ய வேண்டும், எப்படி எல்லாம் வழிபாடு செய்தால், வாராகியின் அருளை முழுமையாக பெறலாம் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல் இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

வாராகி வழிபாட்டு முறை

கோர்ட் கேஸ் வழக்கில் சிக்கி இருப்பவர்கள், சொத்து பிரச்சனை உள்ளவர்கள், ஏவல் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள், எதிரி தொல்லை உள்ளவர்கள், அடுத்தவர்களை நம்பி ஏமாந்தவர்கள், எல்லாம் வாராகிதாயை வழிபாடு செய்யலாம். உங்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைக்க ஒரு சில நாட்களில் வாராகிதாய் நிச்சயம் நல்லதொரு வழியை காட்டி வைப்பாள்.

அதிலும் குறிப்பாக சூரியன் நட்சத்திரத்தைக் கொண்ட ராசிக்காரர்கள் இந்த வாராஹிதாயை வழிபாடு செய்தால் உடனே கேட்ட வரம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. கார்த்திகை, உத்திரம், உத்திராடம், நட்சத்திரக்காரர்கள் வாராகி வழிபாடு செய்வது சிறப்பு. சிம்ம லக்னக்காரர்கள், சிம்ம ராசிக்காரர்கள் வாராகி வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை தரும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வராஹிக்கு பச்சை நிறம் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் வாராகி அம்மன் கோவிலுக்குச் சென்று, வாராகித் தாய்க்கு பச்சை நிற புடவை எடுத்து சாத்தி, பச்சை நிறத்தில் இருக்கும் வளையலை வாங்கி கொடுத்து, வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு.

இப்படி பச்சை நிறத்தில் வாங்கி வைத்து வழிபாடு செய்த வளையலை கோவிலுக்கு வரும் பெண்களுக்கு தானமாக கொடுத்தால் வீட்டில் இருக்கும் சுப காரிய தடை விளக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தவிர வாராகியை இவர்கள் தான் கும்பிடணும், இவர்கள் கும்பிடக் கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது. உடல் சுத்தத்தோடு, மனசுத்தத்தோடு வாராகி தாயை யார் வேண்டுமென்றாலும் வழிபாடு செய்யலாம். அடுத்தவர்களை கெடுக்கும் எண்ணத்தோடு இவ கிட்ட நெருங்க பார்க்காதீங்க. அது ரொம்ப ரொம்ப ஆபத்து.

வீட்டில் வாராகி அன்னையை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால் சின்ன புகைப்படமாக வாங்கி வைத்து வாராகி தாயை வழிபாடு செய்யலாம். தவறு கிடையாது. ஆனால் அவளுக்கு செய்ய வேண்டிய பூஜை புனஸ்காரங்களை முறையாக கடைபிடிக்க வேண்டும். வழிபாட்டு முறைகளை தவறவிடக்கூடாது. குறிப்பாக வாராகி பூஜை செய்பவர்களுடைய மனதில் ஒரு துளி அளவும் கெட்ட எண்ணம் இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே:

சிலை வழிபாடு செய்வதற்கு உண்டான சந்தர்ப்பம் சரியாக இல்லை எனும் பட்சத்தில் அதை தவிர்த்துக் கொள்வது நல்லது. வீட்டில் சிலை இல்லை என்றாலும் பரவாயில்லை, திருவுருவப்படம் இல்லை என்றாலும் பரவாயில்லை, ஒரே ஒரு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு அந்த தீபச்சுடரை வாராகி என்று நினைத்து வழிபாடு செய்தால் போதும் அவளின் அளவற்ற அன்புக்கு நீங்கள் சொந்தக்காரர் ஆகிவிடலாம். மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாடு உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading