bhavna
Posted in

விஜய் டிவி குறித்து பாவனா ஓப்பன் டாக்

விஜய் டிவி குறித்து பாவனா ஓப்பன்ஆக பேசிய தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இன்று திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகளுக்கு எந்த அளவு வரவேற்பும் மௌசும் உள்ளதோ அதுபோல சின்னத்திரை தொகுப்பாளினிகளுக்கும் மிகச் சிறப்பான ரசிகர் படை உள்ளது. அந்த வகையில் தொகுப்பாளினி பாவனா பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

இவர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை அற்புதமான முறையில் தொகுத்து வழங்கியவர்.

தொகுப்பாளினி பாவனா..

இந்நிலையில் தொகுப்பாளனி பாவனா விஜய் டிவியில் இருந்து வெளியேறியதற்கு காரணம் என்ன என்பது பற்றி அண்மை பேட்டி ஒன்றில் தன்னுடைய பர்சனல் விஷயங்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

தொகுப்பாளினி பாவனா ஆரம்ப நாட்களில் ஆர்.ஜேவாக தன்னுடைய கேரியரை துவங்கியவர். இதனை அடுத்து ராஜ் டிவியில் தொகுப்பாளினியாக மாறிய இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் சிவகார்த்திகேயனோடு இணைந்து ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதை அடுத்து மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த நபர்களில் ஒருவராக மாறினார். அது போல மாகாபாவோடு இணைந்து சில நிகழ்ச்சிகளை அற்புதமான முறையில் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

விஜய் டிவியை விட்டு வெளியேறிய ரீசன்..

இவர் இவருடன் இணைந்து பணியாற்றிய மற்ற தொகுப்பாளர்கள் பற்றி பேசும் போது சிவகார்த்திகேயனுடன் அதிகம் பேசியதில்லை. நான் தொகுப்பாளராக இருக்கும் போது அவர் விஜய் டிவியில் கண்ட்ஸ்டெண்டாக இருந்தால் இதனை அடுத்து என்னுடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றினாலும் எங்களுடையே இடைவெளி இருந்தது. நான் அவருடன் மற்றவர்களிடம் பேசுவது போல சகஜமாக பேசமாட்டேன். அதே நேரம் மாகாபாவுடன் மிக சூப்பரான முறையில் பழகுவேன்.

எஸ்.கே டு பர்சனல் விஷயம் வரை ஓபன் டாப்..

மற்ற தொகுப்பாளர்கள் பணியாற்றும் போது இருவரும் என்ன பேச வேண்டும் என்பதை எழுதி வைத்துக்கொண்டு பேசுவோம். ஆனால் மாகாபா அப்படி இல்லை. ஸ்பாட்டில் என்ன காமெடி வருகிறதோ? அதை சொல்லிவிடுவார் அது போல எனக்கும் பேச கற்றுக் கொடுப்பார்.

bhavana-balakrishnan-3-8180932

அதுபோலவே தொகுப்பாளர் விஜய் என்னை குருநாதா என்று அழைப்பார். மிகவும் திறமையானவர் அவருடன் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன். விஜய் டிவியை விட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு நான் விலகி விட்டேன்.

இதனை அடுத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறேன்.

bhavana-balakrishnan-4-9306643

இதை அடுத்து விஜய் டிவியில் இருந்து முதல் முதலில் தான் விலகியது குறித்து பேசிய பாவனா எவ்வளவு தான் பெஸ்ட் கொடுத்தாலும் ஆண்கள் தான் அதிகம் பேசப்படுகிறார்கள்.

பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்ற கருத்தை வருத்தத்தோடு தெரிவித்து இருக்கிறார். இது போன்ற சில காரணங்களால் தான் விஜய் டிவியில் இருந்து வலகியதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளி வந்துள்ளது.

அடுத்த தன்னுடைய பர்சனல் வாழ்க்கையை குறித்து மனம் நொந்து பேசிய அவர் தன்னை பார்க்கும் பலர் இது வரை ஏன் குழந்தை இல்லை என்பதைத்தான் கேட்கிறார்கள். இது போன்ற கேள்விகள் அவருக்கு வலியை கொடுக்கும் என்பதை சற்றும் உணர்ந்ததில்லை. மேலும் கேள்விகளை கேட்டாலே கடுப்பாகிவிடுகிறது. எனது பர்சனல் லைப்பில் தலையிட யார் இவர்கள் என்று கேட்கத் தோன்றுவதாக தனது குமுறலை கொட்டி தீர்த்தார்.

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading