11 வயது சிறுமியின் ஆப்பிள் ஐபோன் தீப்பிடித்து எரிந்துள்ளது! காரணம் தெரியுமா?

11 வயது சிறுமியின் ஆப்பிள் ஐபோன் தீப்பிடித்து எரிந்துள்ளது! காரணம் தெரியுமா?

Follow us on Google News Click Here

கலிபோர்னியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி பயன்படுத்தி வந்த ஆப்பிள் ஐபோன் 6 சாதனம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவம் ஆப்பிள் பயனர்கள் அனைவரையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது, அதேபோல பெரிய பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்திடம் புகார்

கையிலிருந்த ஐபோன் தீப்பிடித்தது

சம்பவம் நடந்த பொழுது சிறுமி படுக்கையிலிருந்திருக்கிறார், கையில் ஐபோனை வைத்துப் பயப்படுத்திக் இருக்கிறார், எதிர்பாராத நேரத்தில் போன் சூடேறத் துவங்கியுள்ளது. தீடிரென சிறுமியின் கையிலிருந்த ஐபோன் தீப்பொறி கிளம்பத் தீப்பிடித்து

ஆப்பிள் நிறுவனத்திடம் புகார்

தனது கையிலிருந்த போன் தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ந்து போன சிறுமி, ஐபோனை படுக்கையில் எறிந்திருக்கிறார். படுக்கையிலிருந்த போர்வையுடன் தீப்பிடித்து எரிந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவனத்திற்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டுள்ளது

தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டுள்ளது

சிறுமியின் தாயார் மரியா அடாட்டா கூரையில், என் மகளின் ஐபோன் தீப்பிடித்து எரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்லவேளை என் மகளிர்க்கு, எந்தவித தீ காயமும் இல்லாமல், பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லாமல் படுக்கையில் எரிந்த தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியிருக்கிறார்.

ஆப்பிள் ஆதரவு சேவை

ஆப்பிள் ஆதரவு சேவை

இந்த சம்பவம் குறித்து ஆப்பிள் நிறுவனத்தின், ஆப்பிள் ஆதரவு சேவை மையத்திற்குக் கால் செய்து புகார் அளிக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி எறிந்த ஐபோனின் புகைப்படங்களும் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகச் சிறுமியின் தயார் மரியா தெரிவித்திருக்கிறார்.

சார்ஜ்ர் கேபிள்கள் காரணமா?

சார்ஜ்ர் கேபிள்கள் காரணமா?

ஐபோன் தயாரிப்பாளரின் கூற்றுப்படி, அங்கீகரிக்கப்படாத சார்ஜிங் கேபிள்கள் மற்றும் சார்ஜர்களைப் பயன்படுத்துவது போன்ற பல விஷயங்களால் ஐபோன் தீப்பிடிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சார்ஜ்ர் கேபிள்களை ஆப்பிள் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தீப்பிடித்த ஐபோன் 7 சாதனம்

இதற்கிடையில், ஐபோன் தீப்பிடித்தது எறிவது இதுதான் முதல் முறை அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஐபோன் 7 சாதனம் தீப்பிடித்து எரியும் வீடியோ ஒன்று டிவிட்டரில் வைரல் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...