Posted in

திருமணத்தில் செம ஆட்டம் போட்ட சிங்கப்பூர் மணப்பெண்

சிங்கப்பூரில் நடந்த தமிழ் திருமணத்தில் மணப்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஏகோபித்த ஆதரவை பெற்று தற்போது இணையத்தில் அதிக பேரால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

சிங்கப்பூரில் நடந்த தமிழ் திருமணத்தில் மணப்பெண் போட்ட செம டான்ஸ்👇 எப்பா! இது கால்லயான பொண்ணா இல்ல கல்யாணத்துக்கு ஆடவந்த பொண்ணா?? ஆட்டத்துல இந்த குத்து குத்தூது!👇👇

கல்யாணவீடுகளில் முன்பெல்லாம் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் கல்யாணவீடுகள் டான்ஸ் கிளப்பாகவும் மாறிவருகின்றது. இதுவும் அப்படியான ஒரு விசயம் தான்! அட ஆமாங்க. இப்போதெல்லாம் என் கல்யாணத்தில் நான் எப்படி ஆடியிருக்கேன் பாருங்கள் என மணப்பெண்கள் தாங்களே வீடியோவே போஸ்ட் செய்வதும் பேஷன் ஆகிவிட்டது. கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் கல்யாணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். கல்யாணவீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

இதனால் இப்போதெல்லாம் கல்யாணவீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதிலும் கல்யாண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் இந்த மணமக்கள் நடனத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதிலும் கல்யாணத்திற்கு முன்னும், பின்னும் மணமக்களை அழைத்து எடுக்கும் போட்டோ சூட்கள் ரொம்பவே பேமஸ்.

இங்கேயும் அப்படித்தான். சிங்கப்பூரில் செட்டிலான தமிழ் குடும்பம் ஒருவர் வீட்டில் கல்யாணம் நடந்தது. அங்கு நம் தமிழ்ப்படங்களில் ஹிட்டான பாடல், டயலாக்களை எடுத்துக்கோர்த்து செம மாஸாக ஆட்டம் போட்டனர். அதிலும் மணப்பெண், இதில் வேற லெவலில் ஆடிய ஆட்டம் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading