விஜய் பட பாடலுக்கு ரேஷ்மா போட்ட டான்ஸ் இணையத்தில்வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளவர் ரேஷ்மா.இவர் முதன்முதலில் தெலுங்கில் ஒளிபரப்பாகிய தி லவ் என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து நடிகை ரம்யாகிருஷ்ணன் நடிப்பில் வெளியாகிய வம்சம் நாடகத்தில் நடித்தார்.பல நாடகங்களிலும் இவர் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த நாடகத்திலும் கிடைக்கவில்லை.

பின்னர் தொடர்ந்து முயற்சி செய்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வாய்ப்பு கிடைத்தது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய வரவேற்பினை பெற்றார் ரேஷ்மா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இருப்பினும் தொடர்ந்து முயற்ச்சி செய்து வந்தார் ரேஷ்மா.சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிகர் பாபி சசிம்ஹா நடிப்பில் வெளியாகிய மசாலா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து இயக்குனர் எழில் இயக்கத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூரிக்கு மனைவியாக நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்.

இந்த படத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.பலரும் தற்போது வரை இந்த புஷ்பா நகைச்சுவையை பேசி சிரித்துக்கொண்டு தான் வருகின்றனர்.அந்தளவிற்கு மக்களிடம் சென்றடைந்துவிட்டார் ரேஷ்மா.இவரை தற்போது வரை புஷ்பா என்று அழைத்தால் தான் மக்களுக்கு தெரியும் என்ற அளவிற்கு பிரபலமாகி விட்டார்.தற்போது இவர் தளபதியின் லியோ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
