saai-palllavi-768x432-1-4415181
Posted in

நடிகை சாய்பல்லவியின் அழகிய புகைப்படங்கள்

நடிகை சாய்பல்லவியின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது. தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி.

கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார் சாய் பல்லவி. இன்றும் பலர் அவரை மலர் டீச்சர் என்று தான் கூப்பிடுகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் தியா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடிக்க தொடங்கினார். இவரரின் நடிப்பில் அண்மையில் வெளியான கார்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கௌதம் ராமச்சந்திரன் இயக்கிய இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி உடன் காளி வெங்கட், ஆர் எஸ் சிவாஜி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவரைத் தொடர்ந்து சாய் பல்லவியின் தங்கை பூஜாவும் தற்போது சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார். இந்நிலையில் சாய் பல்லவியின் அன்சீன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

[modula id=”37705″]

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading