advd-6995460
Posted in

தாயை கொலை செய்த வழக்கை தீர்க்க மகள் சேகரித்த ஆதாரங்கள்

தாயை கொலை செய்த வழக்கை தீர்க்க மகள் சேகரித்த ஆதாரங்கள் குறித்த செய்தி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியியுள்ளது.

அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாநிலம் பைன் பிளஃப் பகுதியில் நடந்த ஒரு துயரமான கொலைச் சம்பவம் தற்போது சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. தாயை கொலை செய்த வழக்கை, மகள் சேகரித்த ஆதாரங்கள் தீர்க்கும் வகையில் போலீஸாருக்கு அளித்த துணிச்சல் பாராட்டுக்குரியதாக மாறியுள்ளது.

50 வயது லூயிஸ் தாம்சன் என்ற பெண், தனது 20 வயது மகள் லியோனாவுடன் பைன் பிளஃப் பகுதியில் வசித்து வந்தார். கணவரை இழந்த பின்னர் வாடகை வருமானத்தால் வாழ்ந்து வந்த லூயிஸ், வெளியில் வேலை செய்யாமல் வீட்டிலேயே இருந்தார். தனிமையில் வாடிய அவர், அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் டெலிவரி பணியாளர்களாக இருந்த கெவியான் ஹாரிஸ் (22) மற்றும் விக்டர் பார்க் (24) ஆகிய இருவருடன் பழகத் தொடங்கினார்.

இது நட்பைத் தாண்டி கள்ள உறவாக மாறியது. லூயிஸ், இருவருக்கும் பணம் கொடுத்து தனது தனிமையை மறைக்க முயன்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆனால், இந்த உறவு பின்னர் அவருக்கே உயிர்கொடை ஆனது.

மகள் லியோனா தாயின் நடத்தை குறித்து பலமுறை எச்சரித்திருந்தபோதும், லூயிஸ் “இது என் வாழ்க்கை, நீ உன் வாழ்க்கையைப் பாரு” என்று புறக்கணித்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலப்போக்கில், கெவியான் மற்றும் விக்டர் இருவரும் லூயிஸை மிரட்டி, கூடுதல் பணம் கேட்டதோடு, அவர் சொந்தமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் சொத்தை தங்களது பெயருக்கு மாற்றும்படி அழுத்தம் தந்தனர். இதை மறுத்த லூயிஸை, “உங்கள் தனிப்பட்ட வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவோம்” என மிரட்டியதாக லியோனா போலீசிடம் தெரிவித்தார்.

அம்மாவின் உயிருக்கு ஆபத்து என சந்தேகமுற்ற லியோனா, அவர்களின் உறவை உறுதிப்படுத்த சில ஆதாரங்களை ரகசியமாக சேகரித்தார். தாயின் வீட்டுக் குப்பைத்தொட்டியில் இருந்த 15க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை சேமித்து வைத்தார். பின்னர் இதுவே வழக்கில் முக்கிய ஆதாரமாக அமைந்தது.

அக்டோபர் 10 அன்று கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய லியோனா, தாயை படுக்கையில் உயிரிழந்த நிலையில் கண்டார். உடலில் வெளிப்படையான காயம் ஏதுமில்லை. போலீசார் முதலில் லியோனாவையே சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். ஆனால் பிரேதப் பரிசோதனையில், “கழுத்து நெறிக்கப்பட்டு மூச்சுத்திணறல் காரணமாக மரணம்” எனவும், மேலும் “மரணத்திற்கு முன் வன்புணர்வு அடைந்திருந்தார்” எனவும் உறுதி செய்யப்பட்டது.

லியோனா வழங்கிய ஆதாரங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, கெவியான் ஹாரிஸ் மற்றும் விக்டர் பார்க்கின் டிஎன்ஏ பொருந்தியது உறுதியானது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு, “சண்டையின்போது தவறுதலாக நடந்தது” என ஒப்புக்கொண்டனர். ஆனால் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அர்கான்சாஸ் போலீஸ் அதிகாரி ஜான் ஸ்மித் கூறுகையில், “லியோனாவின் தைரியமும் அறிவும் இந்த வழக்கை விரைவில் தீர்க்க உதவியது. இது ஒரு முக்கிய எடுத்துக்காட்டு” என்றார்.

மகள் லியோனா, தனது தாயின் நினைவாக, “தனிமையில் தவறான முடிவுகள் எடுக்காமல், நம்பகமானவர்களின் ஆலோசனையை நாடுங்கள்” என சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம், தனிமை, துரோகம் மற்றும் தவறான உறவுகளின் ஆபத்துகளை நினைவூட்டும் எச்சரிக்கை கதையாக அமெரிக்கா முழுவதும் பேசப்படுகிறது. வழக்கு விரைவில் நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளது.

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading