2-27
Posted in

நாகரீகம் என்ற பெயரில் என்ன செய்து வைத்திருக்கிறார்கள் பாருங்கள்

திருமணப் பந்தியில் நாகரீகம் என்ற பெயரில் என்னென்ன செய்து வைத்துள்ளார்கள் என்று நீங்களே பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா என வசீகரா திரைப்படத்தில் இளையதளபதி விஜய் பாடும் பாடலைப் போல சொந்த,பந்தங்களை அழைத்து திருமணத்தை சண்டை, சச்சரவுகள் இல்லாமலும், யாருக்கும் மனக்கசப்பு இல்லாமல் நடத்தி முடிப்பதும் பெரிய கலை தான்.

அதிலும் திருமணங்கள் என்பதே அதிகளவில் கலாச்சாரம் சார்ந்த விசயம் தான். அங்கு பண்பாடு, கலாச்சாரத்துக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும். அதிலும் தல வாழை இலையில் அவியல், பொரியல், கூட்டு என வைத்து சாப்பிடுவதே ரொம்ப நன்றாக இருக்கும். இதனாலேயே திருமண வீடுகள் அழகாகும். திருமண பந்தியில் நுழைந்து இலை போட்டு, அதில் தண்ணீர் தெளித்து இலையைத் துடைப்பது தான் வழக்கம். ஆனால் குறித்த இந்தத் திருமணத்தில் இந்த கலாச்சாரத்தையே உடைத்துவிட்டனர்.

ஆம். இலையில் தண்ணீர் தெளிப்பதற்குப் பதில் டிஸ்யூ பேப்பர் வைக்கிறார்கள். திருமண விருந்துக்கு வந்திருப்போரும் அந்த பேப்பரை எடுத்து அதில் இருக்கும் இலையை சுத்தம் செய்யும் வைப்ஸ் மூலம் இலையை சுத்தம் செய்கின்றனர். பணம் நிறைய இருக்கலாம். அதே நேரம் ஆடம்பரம் காட்டுவதாக நினைத்துக்கொண்டு இலையை சுத்தம் செய்ய தண்ணீரை விடாமல் வைப்ஸ் வைப்பது சரியா? இது நம் கலாச்சாரத்தையே அழித்துவிடாதா? என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

2 thoughts on “நாகரீகம் என்ற பெயரில் என்ன செய்து வைத்திருக்கிறார்கள் பாருங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading