a66a3cff53e75496026280f9ab129079
Posted in

உங்கள் பர்சில் இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் அதிர்ஷ்டம் வந்து கொண்டே இருக்கும்

உங்கள் மணி பரிசில் இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் அதிர்ஷ்டம் வந்து கொண்டே இருக்கும் .. அது என்ன பொருள் எப்படி செய்ய வேண்டும் என்ன செய்தால் அதிர்ஷ்டம் வரும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பணம் இல்லாத ஒரு நாள் வாழ்க்கையை கூட வாழ்வது எவ்வளவு கடினம் என்பது இல்லாதவர்களுக்கு தான் தெரியும். அந்த அளவிற்கு பணம் இன்று அத்தியாவசமாகி விட்டது. அந்த பணத்தை நாம் எவ்வளவு பாடுபட்டு சம்பாதித்தாலும், நம்மிடம் நிரந்தரமாக தங்குவதில்லை, பல நேரங்களில் வருமானமே கூட போதாமல் போகிறது.

இன்னும் சிலருக்கு மணி பரிசில் எப்போதும் ஒரு பைசா கூட இல்லாமல் இருக்கும். இதை எல்லாம் சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். முதலில் பணம் நம்மிடம் இல்லை என்கிற இந்த எண்ணத்தை மாற்ற வேண்டும். எப்போது நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறதோ, அப்போது அங்கு இல்லை என்கிற சூழ்நிலை மட்டும் தான் நிலவும். பணம் இருப்பவர்களிடமே சேர்கிறது இல்லாதவரிடம் இல்லாமலே போகிறது என்ற பொதுவான கண்ணோட்டம் இருக்கிறது.

இதற்கு காரணம் பணம் இருப்பவர்கள் அதை மேலும் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என யோசித்து அதையே செய்து கொண்டிருப்பார்கள். பணம் இல்லாதவர்கள் என்னிடம் இல்லையே என்று யோசித்துக் கொண்டே இருப்பார்கள். இதை மாற்றி பணம் நம்மிடம் சேர என்ன செய்ய வேண்டும் என்பதோடு, இல்லை என்ற வார்த்தையும் பயன்படுத்தாமல் இருந்தாலே பணம் நம்மிடம் வந்து சேர்வதற்கான வழிகள் தானாக பிறக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆண்களை பொறுத்த வரையில் இந்த பொருட்களை மணி பரிசில் வைத்துக் கொள்ளலாம். பெண்கள் மணிப்பர்ஸ் பயன்படுத்துவதாக இருந்தால் அதில் வைத்துக் கொள்ளலாம் அல்லது ஹேண்ட் பேக் வைத்திருந்தால் அதிலும் வைத்துக் கொள்ளலாம். இந்த பொருள்களை எப்போதும் நம்முடனே வைத்திருக்கும் போது பணமானதை ஈர்க்கும் என்று சொல்லப்படுகிறது. பர்ஸில் பணம் சேர வைக்க வேண்டிய பொருள் இந்த பணமானது நம்முடன் நிரந்தரமாக தங்க நாம் பயன்படுத்தும் முக்கியமான பொருள் கோமதி சக்கரம்.

இந்த கோமதி சக்கரம் ஒன்றே ஒன்றை மட்டும் உங்கள் மணி பர்ஸில் எப்போதும் வைத்திருந்தால் போதும், அந்த இடத்தில் பணம் வற்றாமல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த கோமதி சக்கரமானது மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருள்களில் முக்கியமானது. எனவே இது இருக்கும் இடத்தில் நிச்சயமாக பண வரவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது அடுத்து பணம் வரவிற்கு முக்கியமான இன்னொரு பொருள் வில்வ இலை.

இந்த வில்வ இலையை வாங்கி வந்து இலைகளின் மேல் மல்லிகை எண்ணெய் (jasmine oil). இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த எண்ணையை ஒவ்வொரு இலையின் மீதும் தேய்த்த பிறகு அந்த இலையை சிவாலயத்தில் அர்ச்சனைக்கு கொடுக்க வேண்டும். அர்ச்சனை செய்த பிறகு அதிலிருந்து ஒரு இலையை எடுத்து வந்து கவரில் போட்டு, அந்த கவரை உங்கள் மணி பரிசில் எப்போதும் வைத்திருந்தால் தன ஆகர்ஷணம் அதிகமாக பெருகும் என்று சொல்லப்படுகிறது. இது மட்டும் இன்றி இந்த பொருட்கள் இருக்கும் இடத்தில் அதிர்ஷ்டம் எப்போதும் இருந்து கொண்டே என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த இரண்டு பொருட்களை எப்போதும் உங்க மணி பர்ஸில் இருக்கும் படி பார்த்து கொண்டு, பண வரவை அதிகரித்து நல்ல செல்வ வளத்துடன், அதிர்ஷ்டத்தையும் சேர்த்து பெற்று வளமான வாழ்க்கையை வாழுங்கள்.

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading