கள்ளக்காதலனுடன் பிடிபட்ட மனைவிக்கு கொடூர தண்டனை கொடுத்த கணவன் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் உன்சூர் தாலுகா, மூக்கனஹள்ளி கிராமத்தில் கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கர்ப்பிணி மனைவியை கணவன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த விஜய் (35), மனைவி கீதா (28) உடன் வசித்து வந்தார். கீதாவுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த திலீப் (32) என்பவருடன் கள்ளக்காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. கணவர் இல்லாத நேரங்களில் திலீப்பை வீட்டுக்கு அழைத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சில காலமாக இந்த உறவு விஜய்க்குத் தெரிந்திருந்ததாகவும், அவர் மனைவியை எச்சரித்தும் உறவு தொடர்ந்ததால் தம்பதியருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கடந்த செப்டம்பர் 30 இரவு, விஜய் வெளியே சென்றிருந்த போது திலீப் கீதாவின் வீட்டுக்கு வந்தார். அந்த நேரத்தில் திடீரென வீட்டுக்கு திரும்பிய விஜய், மனைவியும் திலீப்பும் சேர்ந்து இருந்ததை கண்டு ஆத்திரமடைந்தார். இருவரையும் தாக்கிய விஜய், கீதா அரிவாளால் தாக்க முயன்றபோது அதை பறித்துக்கொண்டு மனைவியை சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தப்பிச் செல்ல முயன்ற திலீப்பின் காலையும் விஜய் தாக்கியதில் முறிந்தது. அப்பகுதி மக்கள் விரைந்து வந்து விஜய்யைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
உன்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கீதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காயமடைந்த திலீப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மனைவியை கொன்றதும், காதலனின் காலை உடைத்ததும் உறுதியான நிலையில் விஜய் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டதால், மூக்கனஹள்ளி கிராமத்தில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.
