image-6351950
Posted in

ரசிகர்களுக்கு சந்தோசமாக காணொளி வெளியிட்ட இசைஞானி இளையராஜா

ரசிகர்களுக்கு சந்தோசமாக காணொளி வெளியிட்ட இசைஞானி இளையராஜா வின் வீடியோ தற்போது இணையாயத்தை ஆக்கிரமித்து செம வைரலாக பரவி வருகிறது.

ilayaraja-jpg-4355420

தமிழ் திரை உலகில் தன்னிகரில்லா இசையமைப்பாளராக அறியப்படுபவர் இளையராஜா. தன்னுடைய இசையால் பல ரசிகர்கள் மனதை கட்டிப்போட்ட இவர்,  இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் கலை மாமணி , மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது, கேரளா அரசின் விருது, இசையில் சாதனை புரிந்ததற்கான சிறப்பு விருது, பத்மபூஷன், பத்மவிபூஷன், தேசிய விருது  உட்பட ஏராளமான விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

இன்றைய தலைமுறை இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுத்து வரும் இளையராஜாவின் இசையை தமிழ் மொழி கடந்து, சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தில் பயன்படுத்தி இருந்தனர். குணா படத்தில் ராஜா இசையில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் என்கிற பாடல், மீண்டும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

அதே போல் இளையராஜாவின் இசையில் வெளியான சில பாடல்களை தற்போது வெளியாகும் படங்களில் சிலர் அனுமதி இன்றி பயன்படுத்துவதாக கூறி இளையராஜா, ரஜினிகாந்தின் கூலி படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்க்கு எதிராக வைரமுத்து, ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட சிலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்ததையும் பார்க்க முடிந்தது.

இது குறித்த விவாதம் ஒருபுறம் சென்று கொண்டிருந்த நிலையில், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்த இளையராஜா முகம் நிறைந்த புன்னகையோடு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இது குறித்து இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி உள்ளதாவது “கடந்த ஒரு மாதமாக என்னை பற்றிய நிறைய வீடியோக்கள் வருவதாக நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டேன். நான் எதையும் பார்க்கவில்லை. மற்றவர்களை கவனிப்பது என் வேலையில்லை, நான் என் வழியில் சென்று கொண்டிருக்கிறேன.

ilayaraja-8190780

 சில நிகழ்ச்சிகள் மற்றும் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டே ஒரு சிம்பொனியை எழுதி வந்தேன். அதனை 35 நாட்களில் முழுமையாக எழுதி முடித்து விட்டேன். எனக்கு இது மிகப்பெரிய சந்தோஷமான விஷயம். இதனை என்னுடைய ரசிகர்களுக்கு தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். சிம்பொனி என்பது எந்த  திரையிசை மற்றும் பின்னணி இசை அல்லாத ஒன்று என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதற்க்கு ரசிகர்கள் பலர் இளையராஜாவுக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading