15வது திருமண நாளை கொண்டாடிய நடிகை ரம்பா வின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.90 களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர் என்றே இவரை சொல்லலாம்,இவர் இல்லாதா படங்களே கிடையாது,அந்தளவிற்கு ரசிகர்கள் இவரை ரசிக்க தொடங்கிவிட்டனர்.

இவர் தமிழில் 1993 ஆம் ஆண்டு உழவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியினை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.இருப்பினும் தளராமல் தொடர்ந்து படங்கள் நடிக்க தொடங்கினார்.

அதன்படி இவர் நடித்த உள்ளதை அள்ளித்தா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.இப்படத்தின் மூலம் ரம்பாவுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

அப்பொழுது முன்னணி நடிகையாக இருந்த நடிகைகள் சில பேர் ரம்பாவின் வளர்ச்சியை கண்டு பயந்துள்ளனர்,அந்தளவிற்கு தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார் நடிகை ரம்பா.

இவர் தமிழ் நடிகையாக இருந்தாலும் கூட அறிமுகம் ஆகியது என்னவோ தெலுங்கில் தான்.1992ல் தெலுங்கு படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார் ரம்பா,ஆனால் தெலுங்கில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் அங்கிருந்து தமிழுக்கு தாவினார்.
இவர் திருமண நாளை கொண்டாடி உள்ளார்.
