கீர்த்தி சுரேஷ் சொன்ன பகீர் தகவல் ஓன்று செம வைரலாக பரவி வருகிறது.
தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர். அவரது பூர்வீகம் கேரளா தான் என்றாலும் வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான்.
அதன் மூலம் அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானால் குறிப்பாக தமிழில் வெளிவந்த தொடரி, ரஜினி முருகன், ரெமோ, பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, இப்படி பல்வேறு ஹிட் படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
தென்னிந்திய மொழி படங்களை தொடர்ந்து ஹிந்தி படங்களின் நடிக்க ஆர்வம் காட்டி வரும் கீர்த்தி சுரேஷ் அதற்காக தனது உடல் எடையை திடீரென குறைத்து படுமான தோற்றத்திற்கு மாறிவிட்டார்.
அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தனது கவனத்தை செலுத்தி வந்த அவருக்கு ஹிந்தியில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. உடல் எடை குறைந்ததால் தமிழ் பக்கமும் சரியாக தலை காட்ட முடியாமல் தத்தளித்து வந்தார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்தபோது நானும் எனது கல்லூரி தோழியும் ரோட்டில் நடந்து கொண்டு சென்றிருந்தோம்.
அப்போது இரண்டு பேர் எங்களை பாலோவ் செய்து கொண்டே வந்தார்கள். குடித்திருந்த அவர்கள் அதில் ஒருவன் என் பின்னால் வந்து லைட்டாக சாய்ந்தான். உடனே எனக்கு கோபம் வந்துவிட்டது. நான் பலார் என்று அறைந்து விட்டேன்.
பின்னர் சில தூரம் நடந்த உடனே ஒரு பயங்கர சத்தம் கேட்டது பெரிய ஆக்சிடென்ட் ஆனது போல இருந்தது என அவர் கதை கதையாக சொல்லியிருந்தார். கீர்த்தி சுரேஷ் இந்த பேட்டியை பலர் கலாய்த்து வருகின்றார்கள்.
குறிப்பாக என்னம்மா புதுசு புதுசா கதை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்ட சீக்கிரம் சொல்லி முடிமா அடுத்த சாப்ட்ருக்கு போகணும் இல்ல என்றெல்லாம் கீர்த்தியின் பேச்சை பலரும் கலாய்த்து வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ:
