stream-3-72-650x650-3746127
Posted in

குழந்தைகளுடன் சைக்கிள் ஒட்டி மகிழ்ந்த நடிகர் அஜித்

குழந்தைகளுடன் சைக்கிள் ஒட்டி மகிழ்ந்த நடிகர் அஜித்யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.

stream-5-74-9532367

அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

stream-4-89-4173689

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.

stream-3-72-650x650-5747162

போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. அண்மையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் படம் வெளியாகியது

stream-2-104-7277543

இந்நிலையில் அஜித் தனது 62வது படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது மாற்றப்பட்டு தற்போது இப்படத்தினை மகிழ் திருமேனி இயக்க உள்ளார்.

stream-1-117-7183874

லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.இப்படத்திற்கு விடா முயற்சி என படக்குழு பெயரிட்டுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் அஜித் குமார் குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்துள்ளார்,இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

stream-122-5855893

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading