தேசிய சராசரியை விட பாதிப்பு அதிக கொரனோ பாதிப்பு கொண்ட 4 மாநிலங்கள்

தேசிய சராசரியை விட  பாதிப்பு அதிக கொரனோ  பாதிப்பு கொண்ட 4 மாநிலங்கள்

Follow us on Google News Click Here

நாட் டில் கொரோனா வைரஸ் பாதிப்பு கள் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய 4 மாநி லங்களில் அதிகமாக உள்ளன. இந்த மாநி லங்களில் தேசிய சராசரியை விட  பாதிப்பு அதி கமாக உள்ளது.
மராட்டிய மாநிலம்  ஒவ் வொரு நாளும் அதிகபட்ச எண்ணிக்கையிலான புதிய பாதி ப்புகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. அதன் வளர்ச்சி விகிதம் இன்னும் குறைவாகவே உள்ளது. 3.40 சதவீதமாக, இது ஏழு நாள் கூட்டு தினசரி வளர்ச்சி விகிதமான 3.54 சதவீதத்தை விடக் குறைவாக உள்ளது.
மறுபுறம், நான்கு தென் மாநிலங்களிலும் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் உயருகின்றன.  மேலும் அதிக வளர்ச்சி விகிதத்தையும் கொண்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில், 28,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள்  தமிழகத்தில் பதிவாகியுள்ளன.
மாநிலத்தில் மொத்த தொற்று நோய்களின் எண்ணிக்கை நேற்று ஒரு லட்சத்தை தாண்டியது. வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களான கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகியவை தலா எட்டாயிரத்துக்கும் மேற்பட்டவற்றைச் சேர்த்துள்ளன. ஆந்திரா கடந்த இரண்டு நாட்களா மட்டுமே பந்தயத்தில் இணை ந்துள்ளது, கடந்த ஒரு வாரத்தில் சுமார் 5,500 பாதிப்புகளை கண்டறிந்துள்ளது.
தென் மாநிலங்களில் கேரள மட்டுமே விதிவிலக்கு. கடந்த ஒரு வாரத்தில் வெறும் 1,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகளே பதிவாகி உள்ளன. இருப்பினும், அதன் சொந்த தரத்தின்படி, கேரளா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. உண்மையில், 3.6 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் இது தற்போது நாடு முழுவதையும் விட வேகமாக வளர்ந்து வருகிறது. மாநிலத்தில் இப்போது 5,000 க்கும் குறைவான பாதிப்புகள் உள்ளன. ஆனால் இறப்புகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. வெறும் 24 இறப்புகளுடன், நாட்டில் மிகக் குறைந்த இறப்பு விகித மாநிலமாக உள்ளது.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!