Posted in

அம்பியாக இருந்து அந்நியனாக மாறிய சுட்டி குழந்தை!! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி! மிஸ் பண்ணாம பாருங்க…

குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. பிள்ளைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் பிள்ளைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

பிள்ளைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு பிள்ளையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு பிள்ளைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும்.

‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் பிள்ளைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும். பிள்ளைக்காக இதனால் தான் பலரும் தவம் இருக்கிறார்கள். இங்கேயும் ஒரு குட்டிக்பிள்ளை செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அப்படி அந்தக் பிள்ளை என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா?

பதிலுக்குப் பதில் பேசிக்கொண்டு சேட்டையும் செய்துகொண்டிருந்த குட்டிக்பிள்ளையை அவரது, தாயார் கண்டிக்கிறார். பிடித்து வைத்து மிரட்டி, வாயை மூடு என்கிறார். உடனே பிள்ளை வாயை மூட மாட்டேன் என மீண்டும், மீண்டும் சொல்லி அழுகிறது. ஆனால் பிள்ளையை விடாமல் மிரட்டிய அவரது அம்மா, வாயில் கை வை என்கிறார். கடைசியில் டெரராக மாறிய அந்தக் பிள்ளை, அம்மாவின் முடியைப் பிடித்து ஆட்ட அம்மா கடைசியில் ஓவென்று கதறிவிட்டார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading