Posted in

இன்னும் உனக்கு என் மேல கோபம் போகலையா? நான் என்ன தப்பு பண்ணேன் – வெண்பா ; பாரதி கண்ணம்மா முழு எபிசொட்

தமிழ் தொலைக்காட்சியில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான தொடர் Bharathi Kannama. என் பேர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சாந்தி சொன்னதையடுத்து பதறிப்போய் அவரது வீட்டிற்கு ஓடி வருகிறார் Bharathi.

வீட்டிற்கு வந்த Bharathi சாந்தியோடு சேர்ந்து கதவைத் தட்ட வெண்பா உள்ளே அமர்ந்து சந்தோஷமாக ரசித்து கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் Bharathi கதவை உடைத்து உள்ளே வரும்போது தூக்கில் தொங்குவது போல நடிக்கிறார். உடனே Bharathi அவரை கீழே இறக்கி தண்ணீர் கொடுத்து தேற்றுகிறார். வெண்பா அழுது நாடகம் போடுகிறார். Bharathi எதுக்கு லூசுத்தனமா இப்படி பண்ற நான் ஏதோ கோபத்துல சொன்னதுக்காக செத்துப் போவயா என திட்டுகிறான். இனிமே இப்படி பண்ணாத என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப பார்க்கிறார் Bharathi.

இன்னும் உனக்கு என் மேல கோபம் போகலையா? நான் என்ன தப்பு பண்ணேன் என வெண்பா கேட்க அஞ்சலிக்கு நீ பண்ணது பெரிய துரோகம். கண்ணமா எனக்கு துரோகம் பண்ணும் போது இருந்த வலியை விட 100 மடங்கு அதிகமாக இருந்தது என கூறுகிறார். கொஞ்சமாச்சும் என் பக்கம் இருக்க நியாயத்தை நெனச்சு பாரு என கூறுகிறார் வெண்பா. அப்படி என்ன நியாயம் என நான் கேட்க அஞ்சலிக்கு அந்த பிள்ளையை பெத்துக்க சக்தி கிடையாது. அந்தக் பிள்ளை வளர வளர அது அவளோட உயிருக்கே ஆபத்து. நான் எவ்வளவு சொல்லியும் அவ இந்த பிள்ளை வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தா. ஆனா அத அப்படியே விட முடியாது என்பதால்தான் அந்த பிள்ளையை கலைக்க மாத்திரை எழுதிக் கொடுத்தேன்.

என்னோட பிரிஸ்கிரிப்ஷன் கொடுத்தாலும் சாப்பிட மாட்டா என்பதால்தான் அதை உன்னோட பிரிஸ்கிரிப்ஷன்ல எழுதிக் கொடுத்தேன். அஞ்சலி செத்து போனா உங்களுக்கு சந்தோஷமா? இத நீ ஏன் கிட்ட சொல்லலனு நீ கேட்கலாம் ஏற்கனவே நீ ஏகப்பட்ட பிரஷர்ல இருக்க. இதை வேற சொல்லி காயப்படுத்த வேண்டாம் என்று தான் சொல்லல என கூறுகிறார். எனக்கு நீ வேணும் Bharathi. எப்பவும் நான் உன்னோட இருக்கணும். என்னை திட்டு அடி என்ன வேணாலும் பண்ணு ஆனா என்னை வெறுக்க மட்டும் செய்யாத என Bharathiயை கட்டிப்பிடித்து அழுகிறார். வெண்பா சொன்னதை நம்பி Bharathiயும் சரி என அமைதி ஆகிவிடுகிறார்.

இந்தப் பக்கம் Kannama துணி மடித்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அவருடைய அப்பா வீட்டிற்கு வருகிறார். என்னப்பா அழுதுகிட்டே வந்தாங்க உயிரோடு எங்க இருக்காளா இல்ல தூக்குல தொங்கிட்டாலா பார்க்க வந்தீங்களா என கேட்கிறார். என் பொண்ணு அப்படி கோழைத்தனமான முடிவு அல்ல எல்லாம் எடுக்க மாட்டானு என்று எனக்கு தெரியும் என கூறுகிறார் அவருடைய அப்பா.

பிறகு இருவரும் Bharathi செய்ததைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர் உன்னை அசிங்கப்படுத்தி பேசும்போது எனக்கு செவிலியே அடி கொடுக்கணும் போல இருந்தது என கூறுகிறார். ‌ இனிமே நீ இங்கே இருக்காதே என்னோட வந்துடு பாக்கிய Lakshmiயை நான் பார்த்துக்கிறேன் என கூறுகிறார். நீங்க சொல்ற மாதிரி அங்க வந்துட்டா Lakshmiக்கு என்னன்னு சொல்றது என கேட்கிறார் Kannama. இவங்க தாத்தா தாத்தா பாட்டினு உண்மையை சொல்லு. அப்படி சொன்னா அஞ்சலி யாரு அகிலன் யாரு அப்ப Bharathi யாரு என அவர் கேள்வி மேல கேள்வி கேட்பா. கொஞ்ச நாளைக்கு இப்படியே போகட்டும் என கூறுகிறார்.

நாளைக்கு Lakshmi கல்யாணம் அப்பா யாருன்னு கேள்வி வரும் அப்போ என்ன பதில் சொல்லுவ என கேட்கிறார். அது எதுக்கு இப்போ என Kannama கேட்க இது வரைக்கும் நீ உன்னுடைய நியாயத்துக்காவும் சுய மரியாதைக்காகவும் போராடின. இனிமே உன் பொண்ணோட சுய மரியாதைக்காகவும் சேர்ந்து போராடணும். Bharathiதான் அப்பானு நீ தான் புரிய வைக்கணும். அவரை நீதான் மாற வைக்கணும். அதுவா மாறும்னு நெனச்சா மாறாது என கூறுகிறார். அதற்கான முயற்சியை இப்போதிலிருந்தே எடு Kannamaவுக்கு அறிவுரை கூறுகிறார்.

Kannamaவும் அப்பா சொல்வது சரி என்பது போல யோசிக்கிறார். இத்துடன் இன்றைய Bharathi Kannama தொடர் எபிசோட் முடிவடைகிறது.

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading