தமிழ் தொலைக்காட்சியில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான தொடர் ராஜா ராணி 2. இந்த சீரியலில் Sandhiya கடவுளிடம் தன்னுடைய அன்னிக்கு நலமாக பிள்ளை பிறக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறார். பிறகு சரவணனிடம் தன்னுடைய ஐபிஎஸ் கனவைப் பற்றி இன்னைக்கு சொல்லி விடலாமா என யோசித்து சொல்லி விடலாம் என்ன தான் நடக்குதுன்னு பார்த்து விடுவோம் என்று முடிவு செய்து சரவணனுக்கு ஃபோன் செய்கிறார்.

சரவணனிடம் தன்னுடைய கனவு பற்றி பேச வேண்டும் எனக்கூறி எனக்கு சின்ன வயசிலிருந்தே ஒரு ஆசை இருக்கு என ஆரம்பிக்கிறார். பிறகு முழுசாக சொல்லாமல் தயக்கப்பட்டு நான் உங்களிடம் நேரில் சொல்கிறேன் என கூறி விடுகிறார். இந்த பக்கம் Sivagami பணம் காணாமல் போனதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க கோவிலுக்கு சென்று வரலாம் என அவருடைய கணவர் சொல்ல நானும் அதைத்தான் நினைத்தேன் என Sivagami சொல்கிறார். பிறகு அந்தப் பக்கம் வந்த Sandhiyaவையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்கின்றனர்.
கோவிலில் ஒரு பெண்மணி என் பையனுக்கு படிச்ச பொண்ணு வேணும்னு கட்டி வச்சேன் வேலைக்கு போறேனு சொன்னா சரி போகட்டும் நாலு காசு சம்பாதிச்சு நல்லது தானே என்று அனுப்பினேன். ஆனா இன்னைக்கு நாலு காசு பார்ப்பது என்ன ஒரு ஆளாக மதிக்கிறது இல்ல எல்லா வேலையையும் என்னையே செய்ய வைக்கிறார் என கூறுகிறார். இதையெல்லாம் கேட்ட Sivagami என் மருமகள் Sandhiyaவும் நிறைய படிச்சி இருக்கா. ஆனால் நான் வேலைக்கு எல்லாம் போக கூடாதுன்னு சொல்லி விட்டேன் என கூறுகிறார். Sivagami இப்படிச் சொன்னதை கேட்டு Sandhiya அதிர்ச்சி அடைகிறார்.

பின்னர் சரவணனை சந்திக்க போன இடத்தில் அவர் Sandhiyaவுக்கு ஒரு நோட்டு மற்றும் பேனாவை பரிசாக கொடுக்கிறார். பிறகு உங்களது கனவு பற்றி சொல்கிறேன் சொன்னிங்களே என்ன அது எனக்கு அதெல்லாம் ஒன்றும் இல்லை எனக் கூறி சமாளித்து வருகிறார். என்னன்னு சொல்லுங்க எதுவாக இருந்தாலும் நான் நிறைவேற்றி வைப்பேன் என கூறுகிறார். ஆனால் Sandhiya அதெல்லாம் ஒன்றும் இல்லை எனக் கூறி வீட்டிற்கு கிளம்பி விடுகிறார்.

இந்த பக்கம் ரூமில் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கும் செந்திலிடம் வந்து கடையை இரண்டு நாளைக்கு லீவு போட்டுவிட்டு எங்கேயாவது நாம ரெண்டு பேரும் தனியாக போயிட்டு வரலாம் என கூறுகிறார். வெளியே போய் கல்யாண நாளை கொண்டாடலாம் என சொல்லி செந்திலை சம்மதிக்க வைக்கிறார். எப்படியாவது அவளை சம்மதிக்க வைத்தேன் கர்ப்பத்தை கலைத்து விட வேண்டும் என முடிவு செய்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.
