grandmother-give-food-grandchildren-newz2-2157641
Posted in

பேரன் பேத்திகளுக்கு உணவை பகிர்ந்தளிக்கும் பாட்டி

பேரன் பேத்திகளுக்கு உணவை பகிர்ந்தளிக்கும் பாட்டி ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையாவசிகளை கவன்ற்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

grandmother-give-food-grandchildren-newz1-5393014

சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கான உச்சகட்ட பொழுதுபோக்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் தாத்தா, பாட்டி என சொல்லிவிடலாம். தாத்தா மடியில் இருந்து கதை கேட்காத குழந்தைகளே இருக்காது. பாட்டியின் கைபிடித்து மிட்டாய் வாங்கி வந்த குழந்தைகள் தான் நாம். தாத்தாக்களின் சைக்கிளிலோ, ஸ்கூட்டரிலோ முன்னாள் நின்று கொண்டு சென்ற பொடிசுகள் இங்கு அதிகம்.

தாத்தா, பாட்டிகளும் வீட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளின் மீது உயிரையே வைத்து உள்ளனர். ஆனால் இதெல்லாம் நம் தலைமுறையும், இந்த தலைமுறையும் அனுபவித்தது. அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது. காரணம், இன்று கூட்டு குடும்ப உறவுமுறையையே சிதைத்துவிட்டோம். கணவன், மனைவி தாண்டி தாத்தா, பாட்டிகளை பலரும் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு ரிலாக்ஸ்டாக இருக்கிறார்கள். இன்னொருபுறத்தில் இன்று கம்யூட்டர் உலகு ஆகிவிட்டது. குழந்தைகள் செல்போனிலும், மடிகணினியிலும் உலகைப் பார்க்கின்றன. இதனாலும் தாத்தா, பாட்டியின் மடியில் கிடந்து விளையாடும் வாய்ப்பை தவறவிடுகின்றனர்.

அதேபோல் முன்பெல்லாம் குடும்பமாக உட்கார்ந்து சேர்ந்து சாப்பிடுவோம். இப்போது அதுவும் கூட இல்லாமல் போய்விட்டது. அதிலும் வீட்டில் மூத்தபெண் அது அம்மாவோ, பாட்டியோ யாரோ ஒருவர் சோற்றை மொத்தமாக சேர்ந்து உருட்டி வைத்திருக்க, ஒவ்வொருவரும் அதை கையை நீட்டி வாங்கிச் சாப்பிட்ட பொழுதுகள் நம் மனதைவிட்டு அகலாதவை. இப்போது அப்படி சாப்பிடுபவர்களைக்கூட விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், இன்றைய சூழலிலும்கூட அப்படி ஒரு வீட்டில் சேர்ந்து சாப்பிடுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீட்டின் மூத்த பெண்மணி சோறை உருட்டி கையில் கொடுக்க அவரது பேத்திகளில் இருந்து, மகள்கள் வரை அதை கையை நீட்டி வாங்கி சாப்பிடுகின்றனர். கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத அந்த சந்தோசம் இதோ..

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading