வெளிநாட்டில் எடுக்கப்பட்ட திருமண போட்டோஸ் சூட் ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் கவனத்தைப் பெற்று அதிக லைக் மற்றும் பார்வைகளை பெற்று வருகிறது.

தற்போதைய காலகட்டத்தில் திருமணத்தை விட அதற்கு முன்பாகவே மணமக்கள் விதவிதமாக புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் ஃப்ரீ வெட்டிங் போட்டோஸ் மிகவும் பிரபலமாகி வருகிறது இது பெரும்பாலும் வெளிநாடுகளில் அதிகம் புழக்கத்தில் இருந்தாலும். தற்போது இந்தியாவிலும் அதுவும் ஏன் தென் இந்தியாவிலும் மிகவும் பிரபலம் ஆகி வருகிறது. அப்படி எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் நம் நாட்டு தம்பதியினரின் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாக உலா வந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் வெளிநாட்டு தம்பதி ஒன்று திருமணத்திற்கு முன்பு ஒரு ராஜ நாகத்துடன் பெரிய வெட்டிங் போட்டோஸ் எடுத்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தான் தற்போது இணைய வாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இணையவாசிகள் பலரும் அவர்களது தைரியத்தை பாராட்டினாலும் பலரும் அவர்களை வைத்து இணையத்தில் காமெடி கருத்துக்களை பதிவு செய்து வைரல் ஆக்கி வருகின்றனர்.
அந்த வகையில் ஒரு குட்டி காதல் கதை என்ற பெயரில் அவர்களது புகைப்படங்களை இணைத்து இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். அதனை பார்க்கும் நினைவாற்றல் பலரும் அவர்களுக்கு இது தேவை என்று கருத்துக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த பதிவு கொடுத்த உங்களது கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த புகைப்படம் இதோ.

