Posted in

Baakiyalakshmi Episode Update 09.02.22

தமிழ் தொலைக்காட்சியில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான தொடர் பாக்கியLakshmi. ராதிகாவுடன் வழக்கறிஞரை சென்று சந்தித்த கோபி தன்னுடைய மனைவி தனக்கு விவாகரத்து கொடுத்து விடுவார் என சொன்னதை அடுத்து அவர் இதில் கையெழுத்து வாங்கிட்டு வாங்க என ஒரு பேப்பரை கொடுக்கிறார்.

விவாகரத்து பேப்பரோடு அங்கிருந்து கிளம்புகிறார் கோபி. காரில் வந்த பிறகு ராதிகா இப்போதான் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ராஜேஷ் என்ன விட்டு போன பிறகு என் வாழ்க்கை இப்படியே போய் விடும் இனி நானும் மயூவும் தான் என நினைத்தேன். நீங்க என் வாழ்க்கைல வருவீங்க சந்தோஷமாக மாறும் என நான் நினைக்கல என ராதிகா பேசுகிறார்.

நானும் என்னுடைய வாழ்க்கையில் என்னை திரும்ப வருவேன்னு நினைக்கல, நீ வந்த பிறகு தான் என்னுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் வந்திருக்கு என சொல்கிறார். சீக்கிரம் வந்துடுங்க உங்க வீட்டில இருக்கு உங்கள மாதிரி நாங்க செல்பிஸ்ஸா இருக்க மாட்டோம். உங்கள நல்லா பார்த்துப்போம் என கூறுகிறார். உங்க வைப் கையெழுத்து போட்டு விடுவாங்க தானே என ராதிகா கேட்க அவளுக்கு என்ன பணம் கொடுத்த போட்டு இருந்தா என்ன ஒண்ணு பேரம் பேசுவார் ஆனால் போட்டு விடுவாள் என கோபி கூறுகிறார். உனக்காக நான் என்ன வேணா பண்ணுவேன் என கோபி சொல்கிறார்.

இந்த பக்கம் வீட்டில் கோபியின் அப்பாவுக்கு பிசியோதெரபி செய்ய ரஜினிகாந்த் வந்திருக்கிறார். அவர் வேலை செய்யும் போது அவரிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்தவாறே இருக்கிறார் இனியா. சீக்கிரம் குணமாகிவிடும் என்று நம்புங்கள் தாத்தா நீங்களும் நம்புங்க என ரஜினிகாந்த் கூறுகிறார்.

பிறகு மாலையில் வீட்டில் பூஜைக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து முடிந்து பூஜையும் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் கோபி விவாகரத்து நோட்டீஸ் போடு வீட்டிற்கு வருகிறார். உள்ளே வந்தவரை வந்து அமர சொல்கின்றனர். அவரும் கையில் விவாகரத்து நோட்டீஸ் வைத்துக்கொண்டு அமர்கிறார்.

கொஞ்ச நேரத்தில் அவருக்கு போன் கால் வர எழுந்து வெளியே சென்று பேசுகிறார். விவாகரத்து நோட்டீஸ் உங்க கிட்ட தானே இருக்கு என ராதிகா கேட்க ஆமாம் என்கிட்ட தான் இருக்கு என சொல்கிறார். மந்திரம் சொல்லும் சத்தத்தைக் கேட்டு கோவிலில் இருக்கின்றன என ராதிகா கேட்கிறார். இல்ல வீட்ல பூஜை நடக்குது என் பொண்டாட்டி இப்படித்தான் சும்மா இருக்கமாட்டார் போரடிச்சா பக்கத்துல இருக்க லேடிஸ் கூப்பிட்டு பூஜை பண்ணிக்கிட்டு இருப்பா என்று சொல்கிறார்.

சரி மறக்காம கையெழுத்து வாங்கிட்டு வாங்க என ராதிகா சொல்கிறார். சரி என சொல்லி விட்டு மீண்டும் உள்ளே சென்று அமர்கிறார் கோபி. பூஜை முடிந்து கற்பூர ஆராதனை காட்டி எல்லோருக்கும் கொடுக்கிறார் பாக்கியா. கோபி அப்படியே மலைத்துப் போய் நிற்க பிறகு பாக்கியாவே அவருக்கு தீபத்தை எடுத்து முகத்தில் வைக்கிறார்.

அதன்பிறகு கோபி அம்மா அவருடைய கணவரின் கையால் தாலிக் குங்குமம் வைத்துக் கொள்கிறார். பிறகு அவரது காலில் விழுந்து நமஸ்காரம் செய்கிறார். அதன்பிறகு கோபியை அழைத்து குங்குமம் வைக்க சொல்கிறார்.

கோபி அப்படியே நிற்க வாப்பா என திரும்பவும் அழைக்க பாக்கியா பக்கத்தில் தாலியை விவாகரத்து நோட்டீஸை மாறி மாறி பார்க்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியLakshmi தொடர் எபிசோட் முடிவடைகிறது.

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading