தனத்துக்கு நெஞ்சில் கட்டி!! டாக்டர் சொன்ன அதிர்ச்சி செய்தி! புதிய பாண்டியன் ஸ்டார் ப்ரோமோ வெளியானது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தற்போது தொடரில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணத்தினால் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் பிரிகிறது,தற்போது பிரிந்த குடும்பம் மீண்டும் பல்வேறு சண்டைகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்துள்ளது.கதிர் எதிரி கர்ப்பிணியான முல்லையை பைக்கை கொண்டு ஏற்றுகிறார்.முல்லையை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார் கதிர்,அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தை பிறக்கிறது

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் தனம் மருத்துவமனையில் சோதனை செய்ததில் அவருக்கு நெஞ்சில் கட்டி இருப்பதாக மருத்துவர் கூறுகிறார்,இதனை கேட்டு உடைந்து போகிறார் தனம்,அந்த நேரம் அங்கு வரும் மீனா மருத்துவரிடம் இதுகுறித்து கேட்கவே தனத்திற்கு நெஞ்சில் கட்டி இருப்பதை தெரிந்துகொள்கின்றனர்.இதனால் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
